Tuesday 17 December 2013

EMPLOYMENT NEWS

யு.பி.எஸ்.சி.,யின் சிவில் சர்வீசஸ் தேர்வு அறிவிப்பு
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் எனப்படும் யு.பி.எஸ்.சி., அமைப்பு மத்திய அமைச்சகம் சார்ந்த பணியிடங்களைப் பொது எழுத்துத் தேர்வுகள் நடத்தி அதன் மூலம் நிரப்பி வருவது நமக்கு தெரிந்ததுதான். இந்த அமைப்பின் சார்பாக இந்தியன் சிவில் சர்வீஸ் தேர்வுகளை (ஐ.ஏ.எஸ்., ஐ.எப்.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 24 பிரிவுகள்) நடத்துவதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மொத்தம் 1129 பணியிடங்களுக்கு தேர்வு நடக்கிறது. முதல் நிலை தேர்வு ஆகஸ்ட் 23ம் தேதி நடக்கிறது.
வயது: 01.08.2015 தேதி அன்று 21 வயது நிரம்பியவர்களும், 32 வயதுக்கு உட்பட்டவர்களும் இந்தப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அதாவது 02.08.1983க்கு பின்னரும், 01.08.1994க்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ச்சி முறை: முதல்நிலை, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற வரிசையில் தேர்ச்சி இருக்கும். விரிவான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, கோவை, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மையங்களில் இந்த எழுத்துத் தேர்வை எதிர்கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை: முதலில் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறியவும். அதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 19.06.2015, 
இணையதள முகவரிhttp://www.upsc.gov.in/

ராணுவ தளவாட தொழிற்சாலையில் வேலை
ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களைத் தயாரிப்பதில் கோல்கட்டாவிற்கு அருகிலுள்ள டம் டம் என்ற இடத்தில் உள்ள இந்திய ராணுவ தளவாடத் தொழிற்சாலை பிரசித்தி பெற்றது. மிகவும் துல்லியமான முறையில் ராணுவத்திற்கு தேவைப்படும் தளவாடங்களைத் தயாரிப்பதில் இந்த ஆலை பெயர் பெற்று விளங்குகிறது. இந்த ஆலையில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 151 டெக்னிகல் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகளும் காலியிடங்களும்: இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலையில் கார்பென்டரில் 1, எலக்ட்ரீசியனில் 6, எலக்ரோபிளேடரில் 6, இன்ஜினியரிங் எக்சாமினரில் 4, பிட்டரில் 32, கிரைண்டரில் 9, மெஷினிஸ்டில் 27, மேசனில் 2, மில்லரில் 7, மில்ரைட்டில் 19, பெயிண்டரில் 2, எஸ்.எம்.டபிள்யூ.,வில் 10, டர்னர் மற்றும் வெல்டரில் தலா 10ம் சேர்த்து மொத்தம் 151 காலியிடங்கள் உள்ளன. விரிவான தகவல்களை இணையதளத்திலிருந்து அறியவும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் டிரேடு டெஸ்ட் என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். டிரேடு டெஸ்ட் என்பது தகுதி அறிய மட்டுமே நடத்தப்படும். தேர்ச்சி முழுக்க முழுக்க எழுத்துத் தேர்வு அடிப்படையிலேயே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் : ஒவ்வொரு பதவிக்கும் ரூ.100/- ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்தை பாரத ஸ்டேட் வங்கியின் Power Jyoti Account No.34676949264ல் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 12.06.2015
இணையதள முகவரி: <http://i-register.org/ofdoreg/documents/ofdcAdvt.pdf>

டெக்னிகல் காலியிடங்கள்


அண்டை நாடுகளுடனான நமது நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்டது தான் பார்டர் செக்யூரிட்டி போர்ஸ் எனப்படும் எல்லைப் பாதுகாப்புப் படை. பாகிஸ்தானுடனான போரின் உணர்தலின் விளைவாகவே இந்தப்படை உருவாக்கப்பட்டது.
இந்தப் படையில் காலியாக உள்ள இன்ஜினியரிங் பணியிடங்கள் 49ஐ நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
பிரிவுகள்: ஜூனியர் இன்ஜினியர் - சப்-இன்ஸ்பெக்டர் - எலக்ட்ரிகலில் 20ம், சப்-இன்ஸ்பெக்டர் - ஒர்க்சில் 29ம் சேர்த்து மொத்தம் 49 காலியிடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: எலக்ட்ரிகல் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். ஒர்க்ஸ் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் சிவில் இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50/--ஐ 'டி.டி.,' அல்லது போஸ்டல் ஆர்டர் மூலமாக செலுத்த வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறனறியும் தேர்வு, மருத்துவப் பரிசோதனை என்ற அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட படிவமாதிரியிலான விண்ணப்பங்களை முழுமையாக நிரப்பி உரிய இணைப்புகளைச் சேர்த்து பரிந்துரைக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 23.06.2015
இணையதள முகவரி: <http://bsf.nic.in/doc/recruitment/r153.pdf> மற்றும் <http://bsf.nic.in/doc/recruitment/r154.pdf>
EMPLOYMENT NEWS


  1. NHPC LTD. FARIDABAD, HARYANA 
    Name of Post –Trainee Engineer (Civil), Mechanical), (E&C), Trainee Officer, etc.
    No. of Vacancies - 144
    Last Date - 23Feb 2015 

  2. ICAR- CENTRAL ISLAND AGRICULTURAL RESEARCH INSTITUTE 
    Name of Post –Jr. Library Assistant, Jr. Librarian, Computer Assistant, etc.
    No. of Vacancies –12
    Last Date – Within 30 days from the date of Publication in Employment News 

  3. NATIONAL JUDICIAL ACADEMY, M.P. 
    Post – Deputy Librarian, Research Fellow, Computer System Administrator, Asst. Maintenance Engineer and Maintenance Supervisor
    No. of Vacancies - 12
    Last Date - 20 Feb 2015 

  4. MIRANDA HOUSE UNIVERSITY OF DELHI
    Name of Post – Assistant Professor in various Departments.
    No. of Vacancies - 37
    Last Date – 23 Feb 2015 

  5. FOOD CRAFT INSTITUTE (KARNATAKA) SOCIETY 
    Name of Post – Principal, Asst. Lectures, Accountant, U.D.C AND L.D.C
    No. of Vacancies – 8
    Last Date – 31 days from the date of Publication 

  6. JAWAHARLAL NEHRU UNIVERSITY 
    Name of Post – Admission Announcement for Various Courses.
    Admissions open from 6 Feb. to 25 Feb. 
http://c13.zedo.com/OzoDB/0/0/0/blank.gif